/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்று பாசன பகுதியில் விரைவில் நெற்பயிர் அறுவடை
/
அமராவதி ஆற்று பாசன பகுதியில் விரைவில் நெற்பயிர் அறுவடை
அமராவதி ஆற்று பாசன பகுதியில் விரைவில் நெற்பயிர் அறுவடை
அமராவதி ஆற்று பாசன பகுதியில் விரைவில் நெற்பயிர் அறுவடை
ADDED : பிப் 23, 2024 02:36 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர் விரைவில் அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பாசன பகுதியில் நெல், சோளம் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவை பொறுத்து பாசனம் நடந்து வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீர் திறக்கவில்லை, பருவ மழையும் கைகொடுக்கவில்லை என்பதால், அமராவதி ஆற்று பகுதியில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு மூலமாக நெல் சாகுபடி மேற்கொண்டனர்.
தற்போது, 1,000 ஏக்கருக்கும் குறைவாக நெல் சாகுபடி நடந்தது. நெற்பயிர் வளர்ந்து தற்போது அறுவடை நிலைைய எட்டி உள்ளது. மேலும் கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், வைக்கோலை வாங்குவதற்கு கால்நடை வளர்ப்போர் ஆர்வமாக உள்ளனர். இதற்காக வைக்கோல் கட்டு கட்டும் எந்திரங்களும் அமராவதி ஆற்று பகுதியில் முகாமிட்டு உள்ளன. விரைவில் அறுவடை துவங்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.