ADDED : பிப் 26, 2024 07:06 AM
கிருஷ்ணராயபுரம் : கோவக்குளம் கிராமத்தில், டிராக்டர் இயந்திரம் கொண்டு நெல் அறுவடை பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். வாயக்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது நெல் கதிர்கள் விளைந்து விளைச்சல் கண்டுள்ளது. விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கோவக்குளம் பகுதியில் விளைந்த நெற்கதிர்களை, டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் தானியங்களை தனியாக பிரித்து வெயலில் உலர்த்தப்படுகிறது. இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு நெல் வயல்கள் தயார் நிலையில் உள்ளது. மழை பெய்ததால், விளைச்சல் ஓரளவு காணப்படுகிறது என, விவசாயிகள் கூறினர்
