/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அறுவடைக்கு தயாரான நெல்: மழையால் மூழ்கியது
/
அறுவடைக்கு தயாரான நெல்: மழையால் மூழ்கியது
ADDED : ஜூன் 07, 2024 12:04 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தில் சதாசிவம் என்பவர் தனக்கு சொந்தமான ஆறு ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்துள்ளார். இந்த நெல் வயல் அறுவடைக்கு தயாராக இருந்தது.
கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையால், நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, முளைப்பு ஏற்பட்டது. ஒரு ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பயிரிடப்பட்ட நெல் வயல் முழுவதும் மழை தண்ணீரில் மூழ்கி, நெல் மணிகள் முளைக்க தொடங்கியது. தமிழக அரசு விவசாயம் செய்ய, பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கமுடியாது என்று தெரிவித்த நிலையில், துணிச்சலுடன் விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிர் விவசாயம் செய்திருந்தார்.
ஒரு ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, அறுவடைக்கு தயாரான நெல், தண்ணீரில் மூழ்கியதால் விவசாயி மனம் உடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.