/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
வாகனம் மோதி பெயின்டர் பரிதாப பலி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஜன 06, 2025 01:55 AM
குளித்தலை: குளித்தலை அருகே, கடவூர் யூனியன், டி.இடையப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன், 35; பெயின்டர்; இவரது மனைவி பிர-வீனா, 26; இவர்களுக்கு, 6 வயதில் மகன், 2 வயதில் மகள் உள்-ளனர். இந்நிலையில், பழனியப்பன், நேற்று முன்தினம் காலை,
டூவீலரில் தரகம்பட்டிக்கு வேலைக்கு சென்றார்.
பின் வேலை முடிந்து, இரவு, 7:20 மணிக்கு கடவூர் - பாலவி-டுதி நெடுஞ்சாலை, வள்ளி நகர் என்ற இடத்தில், எச்.பி., காஸ் குடோன் வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்-போது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி-யதில், பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பால-விடுதி போலீசார், சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில், பழனியப்பனின் உறவினர்கள், 100க்கும் மேற்-பட்டோர், நேற்று காலை, 10:00 மணி முதல் பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டு-பிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் குடும்பத்தா-ருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்-தனர்.
பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை வைத்து, இரண்டொரு நாளில் விபத்து ஏற்படுத்தியவரை கண்டு
பிடிப்பதாக தெரிவித்தனர். ஆனால், உடனடியாக குற்றவாளியை கண்டுபிடித்து தரக்கோரி, தொடர்ந்து
முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன் பரபரப்பு ஏற்பட்-டுள்ளது.