/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் கரூரில் நிறுத்தம்: பயணிகள் முற்றுகை

ADDED : ஜன 20, 2024 07:14 AM
கரூர் : பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில், கரூரில் நிறுத்தப்பட்டதால், டிக்கெட் வழங்கும் அறையை, பயணிகள் முற்றுகையிட்டனர்.
கேரளா மாநிலம், பாலக்காட்டில் இருந்து நாள்தோறும் காலை, 6:15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கரூர்-திருச்சி ரயில்வே பாதையில், லாலாப்பேட்டை-குளித்தலை மற்றும் பெட்டவாய்தலை-பெருகமணி இடையே பராமரிப்பு பணிகளுக்காக, பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் நேற்று மதியம், 12:00 மணிக்கு கரூரில் நிறுத்தப்பட்டது.
இதனால், கரூர்- திருச்சி ரயில்வே வழித்தட த்தில் இறங்க வேண்டிய பயணிகள், 25 க்கும் மேற்பட்டோர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, டிக்கெட் வழங்கும் அறையை முற்றுகையிட் டனர்.
அவர்களை சமாதானப்படுத்தி ரயில் கட்டண தொகை திரும்ப வழங்கப்பட்டது. கரூர் ரயில்வே ஸ்டேஷனில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.