ADDED : அக் 05, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கார்ணாம்பட்டியில், நேரு இளைஞர் நற்பணி மன்றம், கடந்த, 28
ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
கார்ணாம்பட்டியில்,
நேரு இளைஞர் நற்பணி மன்றத்தை உருவாக்கிய அரசப்பன் தலைமையில்,
சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்த நாளை
முன்னிட்டு, கார்ணாம்பட்டி குளக்கரை மற்றும் ஆற்றுப்படுகையில் ஊர்
பொதுமக்கள், நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர், வ.உ.சி., கபடி குழுவினர்
ஆகியோர் இணைந்து, 500 பனை விதைகளை ஊன்றினர். நேரு இளைஞர் நற்பணி மன்றம்
மற்றும் வ.உ.சி., கபடி குழுவை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
