/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்
/
கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்
கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்
கட்டுரை போட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பிடம்
ADDED : ஜன 28, 2025 07:09 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், திருக்குறள் பேரவை சார்பில் நடந்த கட்டுரை போட்டியில், தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக சிறப்பிடம் பெற்றனர்.
கரூர், திருக்குறள் பேரவையின், 39வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தன. கட்டுரை போட்டியில் திருக்குறள் கூறும் அன்பு, அறம், ஒழுக்கம் ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியர் சிவசுகிதா, ரூபியா, மகிமா சிறப்பாக எழுதி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, திருக்குறள் பேரவை சார்பாக கரூர் நகரத்தார் மண்டபத்தில் தமிழ்ச் செம்மல் மேலை பழனியப்பன் பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கி பாராட்டினார்.
மாணவர்களுக்கு சான்றிதழ், திருக்குறள் புத்தகம், பேரவையின் ஆண்டு மலர், எழுதுகோல், அழகிய சட்டை துணி, ஐந்து வண்ண பெட்டிகள், கிருமி நாசினி ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவித்தனர்.

