/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 நாள் வேலை வழங்காததால் பஞ்., அலுவலகம் முற்றுகை
/
100 நாள் வேலை வழங்காததால் பஞ்., அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 19, 2024 06:39 AM
குளித்தலை: நுாறு நாள் வேலை சரிவர வழங்காததால், பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பயனாளிகளுக்கு வேலை சரிவர வழங்குவதில்லை.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில், பொதுமக்களுடன் சென்று பஞ்.,அலுவலகம் முன் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை போலீசார் மற்றும் கிருஷ்ணராயபுரம் யூனியன் கமிஷனர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வாரத்தில், 100 நாள் வேலை வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.