sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

/

பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை


ADDED : செப் 03, 2024 03:36 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பருவமழை காரணமாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கரூருக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும், பெரும்பாலான மாவட்டங்களில் நடப்-பாண்டு, தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்-துள்ளது. கரூர் மாவட்டத்தில், தனியாக தோட்டம் அமைத்து, பப்-பாளி சாகுபடி செய்வதில்லை. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து கரூருக்கு, பப்பாளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, பப்பாளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வத்திப்பட்டி, வலையப்பட்டி, லிங்கவாடி பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், ரெட் லேடி பப்பாளி ரகம் குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் திண்டுக்கல், மதுரை மாவட்-டத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழை காரணமாக, பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பப்பாளி அனுப்-பப்படுகிறது. ஒரு கிலோ பப்பாளி, 50 முதல், 60 ரூபாய் வரை விலை போகும். தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us