ADDED : மே 11, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, காகித ஆலையில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், புன்செய் புகழூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி, 57; புகழூர் காகித ஆலையில் (டி.என்.பி.எல்.,) ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று அதிகாலை காகித ஆலையில் பக்காஸ் குப்பையை, கன்வேயர் பெல்ட்டில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கன்வேயர் பெல்ட்டில் நல்லுசாமியில் கால் சிக்கியதால், தவறி கீழே விழுந்தார்.
அதில், தலையில் படுகாயம் அடைந்த நல்லுசாமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நல்லுசாமிக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.