பள்ளப்பட்டியில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
பள்ளப்பட்டியில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 14, 2026 04:28 AM

அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்-களிக்க உறுதி செய்யும் வகையில், பள்ளப்பட்டியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பள்ளப்பட்டி பகுதியில் சட்டசபை தேர்தலையொட்டி, பொதுமக்கள் அச்ச-மின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், அரவக்கு-றிச்சி போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கொடி அணி-வகுப்பு ஊர்வலத்தை நடத்தினர்.பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்-துவமனை, ஷாநகர் கார்னர் ஆகிய பகுதிகள் வழியாக கொடி அணி வகுப்பு சென்றது. இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி டி.எஸ்.பி., அப்துல் கபூர், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படை போலீசார் என, 200க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
