/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரசா கார்னரில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
/
தெரசா கார்னரில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
தெரசா கார்னரில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
தெரசா கார்னரில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : ஜன 23, 2025 06:25 AM
கரூர்: கரூர் தெரசா கார்னில் வாகனங்கள், நீண்ட நேரம் நிறுத்தப்படு-வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூரில் இருந்து திருச்சி, குளித்தலை, மணப்பாறை, தரகம்பட்டி, புலியூர் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்-ககேட், கருப்பக்கவுண்டன்புதுார், தெரசா கார்னர் வழியாக காந்திகிராமத்தை தாண்டி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை, சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும், சில அரசு நிறுவனங்களும் உள்ளன.கரூர் தெரசா கார்னர் பகுதியில், பிரிவு சாலையில் போக்குவரத்து நடக்கிறது.
இந்நிலையில், தெரசா கார்னர் பகுதியை ஒட்டியுள்ள கருப்பக்கவுண்டன்புதுார் பிரிவு சாலை அருகே, நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகி-றது.இந்த சாலையை கடக்கும் போது, வாகனங்களும் மிகுந்த சிர-மத்துக்கு உள்ளாவதுடன் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, தெரசா கார்னர் பகுதியை ஒட்டி சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படு-வதை, சீரமைக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்-றனர்.

