/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி
/
குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி
குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி
குறுகலான சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் நெருக்கடி
ADDED : ஆக 11, 2025 05:52 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியின் கடைவீதி பகுதி அதிக வாக-னங்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இதில், வணிக வளாகங்கள் மற்றும் சிறு வணிக கடைகள், இறைச்சி கடைகள், காஸ் குடோன் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இந்த சாலையின் முடிவில் சார்பதி-வாளர் அலுவலகமும் செயல்பட்டு வருவதால், இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் வந்து சென்றவாறு
உள்ளது.
இச்சாலையின் இருபுறமும் கார்கள், டூவீலர் வாகனங்கள் நிறுத்துவதால், பொதுமக்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் கண்காணித்து, சாலையில் மக்களுக்கு இடையூறாக நிறுத்திச்செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.