/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆட்சியில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேசும் விஷயம்; எம்.பி., ஜோதிமணி

ADDED : செப் 29, 2024 03:26 AM
கரூர்: ''ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம்,'' என, கரூர் காங்.,- எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாநில சிறுபான்மை-யினர் ஆணையம் சார்பில், கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில், எம்.பி., ஜோதிமணி பங்கேற்ற பின், நிருபர்களிடம் கூறி-யதாவது:காங்., கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்-பதை நினைக்கிறோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து பேசும்-போது, மற்ற விஷயங்களை பற்றி பேசுவோம். அனைத்து அர-சியல் கட்சிகளுமே, ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புகின்றன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்-சியை நடத்தி வருகிறார். வி.சி.க., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில், இண்டியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சி-களும் பங்கேற்க உள்ளோம். மதுவிலக்கு நிலைப்பாட்டை பொருத்தவரை, யாருக்கும் இரு வேறு கருத்து கிடையாது. அனைத்து கட்சியினருமே மதுவிலக்கு வேண்டுமென்றே சொல்-கின்றனர். மது உட்பட அனைத்து விதமான போதை பொருட்-களும் இல்லாத, சமுதாயத்தையே நாம் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர், கூறினார்.