/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் கண்டு கொள்ளாத அரசியில் கட்சிகள் : பழைய மாலையுடன் காட்சியளித்த காந்தி சிலை
/
கரூரில் கண்டு கொள்ளாத அரசியில் கட்சிகள் : பழைய மாலையுடன் காட்சியளித்த காந்தி சிலை
கரூரில் கண்டு கொள்ளாத அரசியில் கட்சிகள் : பழைய மாலையுடன் காட்சியளித்த காந்தி சிலை
கரூரில் கண்டு கொள்ளாத அரசியில் கட்சிகள் : பழைய மாலையுடன் காட்சியளித்த காந்தி சிலை
ADDED : ஜன 31, 2024 03:34 PM

கரூர் : கரூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, காந்தி சிலையை அரசியல் கட்சியினர் கண்டு கொள்ளவில்லை.
நினைவு நாளான நேற்று, பழைய மாலையுடன், காந்தி சிலை காட்சி யளித்தது.தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் காந்தி நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.ஆனால், கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் கடந்த, 2021 பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் பழனிசாமி, புதிய காந்தி சிலையை திறந்து வைத்தார். காந்தியின் நினைவு நாளான நேற்று அந்த காந்தி சிலையை காங்., கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. காந்திசிலை சில நாட்களுக்கு முன், அணிவிக்கப்பட்ட பழைய மாலையுடன் காட்சி யளித்தது.* பிளாஷ் பேக் கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா கடந்த, 1952 ல் செப்டம்பர் மாதம், 2 ல் தேச தந்தை காந்திக்கு, இரண்டரை அடி சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில், காந்தி சிலை பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், புதிதாக, எட்டு அடி உயரம் கொண்ட வெண்கல சிலை அமைத்து பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டருக்கு, 2020 நவம்பர், 3 ல் கோரிக்கை கடிதம் அனுப்பபட்டது. இதையடுத்து, சிதிலம் அடைந்த பழைய காந்தி சிலையை அகற்றி விட்டு, புதிய சிலையை அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம், 2021 ல் பிப்ரவரி, 12 ல் அனுமதி வழங்கியது. இதையடுத்து, பழைய காந்தி சிலை அகற்றப்பட்டு, கரூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், எட்டு அடி உயரம் கொண்ட புதிய காந்தி சிலை வைக்கப்பட்டது. தகவல் அறிந்த, காங்., எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., நிர்வாகிகளுடன் சென்று, புதிதாக சிலை அமைக்கும் பணியை தடுத்தார். மேலும், பழைய சிலையை மீண்டும் வைக்க வேண்டும். சிலை பீடத்தை குச்சியால் உடை த்து கட்டுமானம் சரியில்லை, புதிதாக சிலை அமைக்கக்கூடாது என கூறி தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டார். ஜோதி மணி உள்ளிட்டவர்கள், கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.அன்று பழைய சிலைக்காக போராடியவர்கள், காந்தியின் நினைவு நாளையொட்டி, புதிய காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த கூட, நேற்று மாலை வரை காங்., கட்சி நிர்வாகிகள் வரவில்லை. பிறகட்சியினரும், அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. பழைய மாலையுடன் காட்சிய ளித்த, காந்தி சிலையை பார்த்த பொது மக்கள் மனம் நொந்தப்படியே சென்றனர்.