/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
/
கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
ADDED : அக் 23, 2025 02:06 AM
கரூர், தீபாவளி விடுமுறை முடிந்து ஊர்களுக்கு மக்கள் திரும்பியதால், கரூர் புதிய ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.
கரூர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் அரசு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் வசித்த மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் வந்திறங்கினர். அவர்கள், குடும்பத்துடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி முடித்தனர்.
தீபாவளி பண்டிகை விடுமுறை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இருந்த போதும் வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நேற்று ஊர்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பினர்.
இதனால் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. அவ்வப்போது, மழை பெய்து கொண்டே இருந்ததால் சிரமத்துக்குள்ளாகினர்.