/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூரில் இருந்து இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
/
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூரில் இருந்து இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூரில் இருந்து இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூரில் இருந்து இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 13, 2024 08:47 AM
கரூர்: கரூர் வழியாக செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை, எழும்பூர் வரை மீண்டும் இயக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இருந்து கேரளா, கரூர் வழியாக நாள்தோறும் சென்னை
எழும்பூருக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-16160) இயக்கப்பட்டு வந்தது. தினமும் இரவு, 7:55 மணிக்கு கரூர்
வரும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், 8:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 3:30 மணிக்கு சென்னை
எழும்பூரை சென்றடையும்.சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு, 11:15 மணிக்கு புறப்படும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்,
(எண்-16159) மறுநாள் காலை, 6:30 மணிக்கு கரூர் வரும். கரூரில் இருந்து பகல் நேரத்தில், சென்னைக்கு
ரயில் இல்லாத நிலையில், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை, கரூர் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்தி
வருகின்றனர்.இந்நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனை பராமரிப்பு காரணமாக, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்,
சில மாதங்களுக்கு முன்பு, சென்னை எழும்பூர் வரை இயக்கப்படாமல், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில்
நிறுத்தப்பட்டது. தற்போது, பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் சென்னை
எழும்பூரில் இருந்து மங்களூரு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால், பொதுமக்கள்
அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, கரூர் மாவட்ட பயணிகள் கூறியதாவது:பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் வரை இயக்கப்படாமல்,
தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படுகிறது. அதேபோல் இரவு, 11:50 மணிக்கு தாம்பரத்தில் இருந்துதான்,
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுகிறது.தமிழகத்தில் இருந்து செல்பவர்களுக்கு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த
பயணிகளும் அவதிப்படுகின்றனர். அதிகாலை, 3:00 மணிக்கு மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்,
தாம்பரத்துக்கு செல்கிறது. அங்கிருந்து எழும்பூர் செல்ல, எலக்ட்ரானிக் ரயில் அல்லது டவுன்
பஸ்சுக்காக, ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.அதேபோல், சென்னை நகரில் வேலையை முடித்து விட்டு, தாம்பரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை, மீண்டும் சென்னை எழும்பூரில் இருந்து இயக்க, தென்னக
ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.