தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு டவுன் பஸ்சில் ஒழுகிய மழைநீரால் பயணிகள் அவதி

அரசு டவுன் பஸ்சில் ஒழுகிய மழைநீரால் பயணிகள் அவதி

அரசு டவுன் பஸ்சில் ஒழுகிய மழைநீரால் பயணிகள் அவதி


ADDED : நவ 25, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர; கரூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் மழைநீர் ஒழுகியதால், பயணிகள் அவதிப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், வேலுாரில் இருந்து நேற்று மதியம், கரூருக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. அதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில் பஸ் சென்ற போது, மழை பெய்தது. அப்போது, பஸ்சின் மேல்தளம் சேதம் அடைந்து இருந்ததால், மழைநீர் பஸ்சில் ஒழுகியது. இதனால், பயணிகள் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்தனர். இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.பிறகு, அரசு டவுன் பஸ்சில் வந்த பயணிகள், பழைய பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடப்பட்டனர். பிறகு, அரசு டவுன் பஸ் போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us