/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதி
/
நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதி
ADDED : செப் 09, 2025 01:37 AM
கரூர், கரூர் அருகே, தான்தோன்றிமலையில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-திண்டுக்கல் சாலை தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் உள்ளது.
மேலும், தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட அரசு விளையாட்டு மைதானம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பஸ்சில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இரண்டு புறமும், நிழற்கூடம் இல்லை. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இரண்டு புறமும், பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் வகையில், கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.