/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
/
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
ADDED : அக் 31, 2024 03:44 AM
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 117 வது ஜெயந்தி விழா, 62 வது குருபூஜை விழா நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து காலை 10.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும், ஜோதி எடுத்து வந்தும் மரியாதை செலுத்தினர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மரியாதை செய்தனர்.
பாதுகாப்பு பணியில் தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் டி.ஐ.ஜி., அபினவ்குமார், எஸ்.பி., சந்தீஷ் முன்னிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
பசும்பொன் கிராமத்தில் அவ்வப்போது ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு ஆய்வு செய்தனர்.
பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச். ராஜா, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், எம்.பி. தர்மர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், உதயகுமார், செல்லுார் ராஜு, மணிகண்டன் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ், மதுரை ஆதினம், ம.தி.மு.க., சார்பில் எம்.பி., துரை, பா.ம.க., எம்.எல். ஏ., மணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

