/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும் ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
/
விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும் ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும் ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும் ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
ADDED : ஜன 02, 2025 07:34 AM
ஓசூர்: ஓசூர் ராஜகணபதி நகர் வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், விவ-சாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும் கடலைக்காய் திருவிழா நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி சுற்றுப்புற பகுதிகளில், ராகி, நிலக்க-டலை போன்ற பல்வேறு வகையான விவசாய பயிர்களை விவசா-யிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வு மேம்படவும், நாடு நலம் பெறவும், ஓசூர் ராஜகணபதி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வர-சித்தி ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் ஜன., 1 ஆங்கில புத்தாண்டு தினத்தில், கடலைக்காய் (நிலக்கடலை) திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும் கடலைக்காய் திரு-விழா நடத்தப்படுகிறது. 67 ம் ஆண்டாக கடலைக்காய் திருவிழா நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிே-ஷகம், புஷ்ப அலங்காரம் நடந்தது.காலை, 10:00 மணிக்கு மேல், உற்சவ மூர்த்தி குவித்து வைக்கப்-பட்டிருந்த கடலைக்காய்க்கு, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜை செய்-யப்பட்டன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கட-லைக்காய்களை கோவில் கோபுரம் மீது துாக்கி வீசி ஆஞ்சநே-யரை வழிபட்டனர். கோபுரத்தில் மீது வீசப்பட்ட கடலைக்காயில் கீழே விழுந்தவற்றை பக்தர்கள் வீடுகளுக்கு பிரசாதமாக எடுத்து சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பா-டுகளை, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவரும், கோவில் நிர்வாகியுமான மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர், சுரேஷ் உட்பட பலர் செய்திருந்தனர். ராமு, சீனிவாசன், சந்திரன், தி.மு.க., வார்டு செயலாளர் மகேஷ்-பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

