/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்
/
கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்
கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்
கரூரில் நாளை பென்ஷனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்
ADDED : அக் 27, 2024 01:14 AM
கரூர், அக். 27-
திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நாளை கரூரில் நடக்கிறது.
திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் ஆசிஷ் குமார் திரிபாதி வெளியிட்ட அறிக்கை:
பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவன வளாகத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.