/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு அறிவுரை
/
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு அறிவுரை
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு அறிவுரை
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு அறிவுரை
ADDED : டிச 15, 2024 01:17 AM
கரூர், டிச. 15-
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கரூர் கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஆண்டாங்கோவில், அணைப்பாளையம், ஒத்தமாந்துறை ஆகிய இடங்களில் அதிகளவு அமராவதி தண்ணீர் செல்கிறது. இந்த இடங்களை கலெக்டர் தங்கவேல், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் அவர், கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, அமராவதி அணையின் நீர்மட்டம், 87.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, 11,522 கனஅடியாகவும், அணையின் நீர் வெளியேற்றம் 11,375 கனஅடியாகவும் உள்ளது.
இதனால், கரூரில் உள்ள ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து, ௧௮,039 கனஅடியாக அதிகரித்து வருகிறது. கரையோர பகுதிகளில் வசிப்போர், ஆற்றில் இறங்கி குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, செல்பி எடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். மேலும், ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் மற்றும் நீர் நிலைகளின் கொள்ளளவை தொடர்ந்து கண்காணித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமராவதி அணையின் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், மேலும் கூடுதல் நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறினார்.
ஆய்வின் போது, டி.ஆர்.ஓ., கண்ணன், அமராவதி அணை வடிநிலக்கோட்ட (தாராபுரம்) செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் உடனிருந்தனர்.