/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொடிவேரியில் குளிக்க மக்களுக்கு அனுமதி
/
கொடிவேரியில் குளிக்க மக்களுக்கு அனுமதி
ADDED : ஏப் 07, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை மற்றும் சுற்று வட்-டார பகுதியில் கொட்டிய கனமழையால், பவானி ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை அணை பகுதியில் நீர்வரத்து, 306 கன அடியாக குறைந்தது. இதனால் காலை, 8:30 மணி முதல், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனும-திக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர். அருவியில் குளித்தும், பரிசல் பயணம் சென்றும் பொழுதை கழித்தனர்.

