/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
/
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
ADDED : மார் 22, 2024 07:03 AM
கிருஷ்ணராயபுரம் : மேட்டு மகாதானபுரம் பகுதியில் இருந்து, பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டு மகாதானபுரம் பகுதியில் இருந்து பழையஜெயங்கொண்டம் கோவக்குளம் பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருக்கிறது.இதனால் சாலை வழியாக செல்லும் போது மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் மகாதானபுரம் பஞ்சாயத்து குப்பை முழுவதும், மேட்டு மகாதானபுரம் சாலை இருபுறமும் கொட்டப்படுகிறது.-- இதனால் சாலை அசுத்தமான நிலையில் இருக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் குப்பை அகற்றி சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

