/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
/
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
ADDED : செப் 28, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோசமான சாலையால்
மக்கள் கடும் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம், செப். 28 -
கோவக்குளம் பகுதியில் இருந்து, தொட்டியப்பட்டி வரை செல்லும் தார்சாலை மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் பகுதியில் இருந்து, தொட்டியப்பட்டி வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமானோர் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது, சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.