/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெயிலின் தாக்கத்தை தணித்த மழைகரூர் மாவட்டத்தில் மக்கள் மகிழ்ச்சி
/
வெயிலின் தாக்கத்தை தணித்த மழைகரூர் மாவட்டத்தில் மக்கள் மகிழ்ச்சி
வெயிலின் தாக்கத்தை தணித்த மழைகரூர் மாவட்டத்தில் மக்கள் மகிழ்ச்சி
வெயிலின் தாக்கத்தை தணித்த மழைகரூர் மாவட்டத்தில் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 17, 2025 02:00 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில் பெய்த மழையால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் மக்களுக்கு ஆறுதல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் மைய பகுதியாக விளங்கும் கரூர், தொழில் நகரமாகும். இங்கே காவிரி ஓடினாலும், செழுமையான விவசாயம் நடப்பதில்லை. இந்த மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. சுண்ணாம்பு மண் நிறைந்த மாவட்டம் என்பதால், இயற்கையாகவே இங்கு மானாவாரி நிலங்கள் அதிகம்.
இங்கு பல தொழிற்சாலைகள் உள்ளன. அதனாலும் இங்கு வெப்பம் அதிகம். கடந்த ஆண்டு கோடை காலத்தில் க.பரமத்தி பகுதியில்தான் அதிக வெப்பம் பதிவானது.கரூர் பரமத்தியில் கடந்த, 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்தாண்டு மே மாதம், 44 செல்சியஸ் (111.2 டிகிரி) வெயில் பதிவாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும், 4 சதவீதம்தான் மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. அதிலும், கடவூர் ஒன்றியத்தில், 2 சதவீத அளவிலேயே மரங்கள் இருக்கின்றன.
மீதமுள்ள 2 சதவீத மரங்கள்தான் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ளது. இந்த ஆண்டு பிப்., மார்ச் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இங்கு, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பாதிவாகி வந்தது.சில நாட்களாக இரவு நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் இரண்டு நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட் கீழ் வெப்பம் பதிவாகி வருகிறது.
நேற்று முன்தினம் 36.8 செல்சியஸ் (98.24 டிகிரி பாரன்ஹீட்), நேற்று 34.5 செல்சியஸ் (94.1 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகி இருக்கிறது. இதனால், பகல் நேரத்தில் மக்கள் நடமாட முடிந்தது. தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றால், மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கும் என மக்கள் அச்சத்தில்
உள்ளனர்.