/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மதுக்கரை நெடுஞ்சாலை அருகில் கம்பம் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
/
மதுக்கரை நெடுஞ்சாலை அருகில் கம்பம் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
மதுக்கரை நெடுஞ்சாலை அருகில் கம்பம் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
மதுக்கரை நெடுஞ்சாலை அருகில் கம்பம் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
ADDED : டிச 06, 2024 07:28 AM
கிருஷ்ணராயபுரம்: முனையனுார் பகுதியில் இருந்து, மதுக்கரை வரை செல்லும் நெடுஞ்சாலை அருகில் உயர்மின்சாரம் செல்லும் மின்கம்பம் ஒன்று, சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் உள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த முனையனுாரில் இருந்து, மதுக்கரை வரை நெடுஞ்சாலை செல்கிறது. சாலையோர இடங்களில் உயர் மின்சாரம் செல்லும் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்றாலை மற்றும் சோலார் மின்சாரம் எடுத்து செல்லப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு மின்சாரம் செல்லும் மின்கம்பம் சாயந்த நிலையில் சாலையோரம் கிடக்கிறது.
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை, மழை நீர் வடிகால் தடுப்பு சுவர்கள் தாங்கிய நிலையில் உள்ளது. அந்த வழியே மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. ஆகையால், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.