/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் மக்கள் பீதி
/
பள்ளப்பட்டியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் மக்கள் பீதி
பள்ளப்பட்டியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் மக்கள் பீதி
பள்ளப்பட்டியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் மக்கள் பீதி
ADDED : மே 18, 2025 06:55 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில், சாலை விதிகளுக்கு புறம்பாக வயது குறைந்த சிறுவர்கள், பைக் ஓட்டி செல்கின்றனர். அதுவும் தாறுமாறாக வேகமாக ஓட்டி செல்-வதால், மற்ற வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது.
சிறுவர்கள் போட்டி போட்டு, வாகனங்களை ஓட்டி செல்கின்-றனர். மேலும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் செல்கின்றனர். சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி விபத்தை
ஏற்படுத்தினால்,
அந்த வழக்கு பெற்றோர் மீது தொடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டம் நடைமுறையில் இருந்தும் பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். குறிப்-பாக, இரவு நேரங்களில் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி செல்வதால், அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, பெற்றோர் தங்களது பிள்ளைகளை, உரிய வயதுக்கு பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும். வாகனங்களை ஓட்டும் சிறுவர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.