/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பராமரிப்பின்றி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

ADDED : ஜூன் 09, 2025 03:42 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலையில் வீட்டு வசதி வாரிய நீர்த்தேக்க தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் விஷ ஜந்-துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர், தான்தோன்றிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளா-கத்தில், ஆறு பிளாக்குகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கட்டட வளாகம் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், பெரும்பாலான குடியிருப்புகள் சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளன. தற்போதைய நிலையில் இரண்டு பிளாக்குகள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில பிளாக்குகளில் மட்டுமே பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அவையும், ஆங்காங்கே பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன.
குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என, இங்கு வசிப்ப-வர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடியிருப்பு வளாகத்தை சுற்றிலும் சாக்-கடை அடைப்பு, குடிநீர் குழாய் உடைப்பு, மோசமான நிலையில் தரைத்தள நீர்த்தேக்க தொட்டி என, பல்வேறு குறைபாடுகள் உள்-ளன.
நீர் தேக்க தொட்டியை சுற்றி செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இங்கு, விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால், குடியிருப்பு வாசிகள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தான்தோன்றிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தை பார்வையிட்டு, உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.