/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பதால் மக்கள் தவிப்பு
/
சாலையோரம் குப்பை எரிப்பதால் மக்கள் தவிப்பு
ADDED : ஆக 22, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, அந்தந்த பகுதிகளின் சாலையோரத்தில் கொட்டி, எரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய சாலை பகுதிகளில் குப்பை தீயிட்டு எரிக்கப்படுவதால், ஏற்படும் புகையின் காரணமாக விபத்துகள் நடக்கிறது. எனவே, அனைத்து பகுதிகளிலும் குப்பையை சேகரிக்க குப்பை தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.