/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையில் அழுகும் குப்பை தொற்று அபாயத்தில் மக்கள்
/
மழையில் அழுகும் குப்பை தொற்று அபாயத்தில் மக்கள்
ADDED : டிச 14, 2024 01:00 AM
கரூரில் மழை பெய்து வரும் நிலையில், மதுரை சர்வீஸ் சாலையில் குப்பை அழுகிய நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையான, சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில், கொட்டப்பட்ட குப்பை பல நாட்களாக அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். எனவே, கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையின், சர்வீஸ் சாலையில் அழுகிய நிலையில் உள்ள குப்பைகளை அகற்ற, ஆண்டாங்கோவில் கிழக்கு, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

