/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான புகழூர் பிரிவு சாலையால் மக்கள் தொடர் அவதி
/
குண்டும், குழியுமான புகழூர் பிரிவு சாலையால் மக்கள் தொடர் அவதி
குண்டும், குழியுமான புகழூர் பிரிவு சாலையால் மக்கள் தொடர் அவதி
குண்டும், குழியுமான புகழூர் பிரிவு சாலையால் மக்கள் தொடர் அவதி
ADDED : டிச 13, 2024 01:20 AM
கரூர், டிச. 13-
புகழூர் பிரிவு சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர், சேலம் தேசியநெடுஞ்சாலையில், புகழூர் பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் பல கல்வி நிலையங்கள் இருப்பதால், காலை, மாலை நேரங்களில் அதிகளவில் வாகன போக்குவரத்து காணப்படும். விவசாய நிலங்களும் உள்ளதால், வேளாண் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த சாலை பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது. ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக சாலையை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

