/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
வாரச்சந்தை கட்டடங்களை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 05, 2024 02:00 AM
கரூர்: கரூர் அருகே, க.பரமத்தி வாரச்சந்தையில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, க.பரமத்தியில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை சந்தை நடக்கிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட, வெளிமாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் க.பரமத்தி சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், க.பரமத்தி சந்தை பேட்டையில், கடை அமைக்கும் பகுதிகள் சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும், சில கட்டடங்களும் பழுதடைந்துள்ளது. இதனால், போதிய இட வசதி இல்லாமல், வியாபாரிகள் திறந்த வெளிப்பகுதியில், சாலையோரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், க.பரமத்தி சந்தை பேட்டையில், பழுதான கடைகளை சீரமைக்கவும், கூடுதலாக கட்டடங்கள் கட்டவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.