/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்
/
பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் குவிந்த பொதுமக்கள்
ADDED : ஜன 15, 2025 12:53 AM
கரூர், :
பொங்கல் பண்டிகையையொட்டி, கரூரில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் கோவில்களில் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம் போகியுடன் பொங்கல் பண்டிகை தொடங்கியது. கரூரில் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில்களில், புதுமண தம்பதிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில், நின்று சுவாமியை வழிபட்டனர்.
கரூர் மேட்டுத்தெரு கன்னிகாபரமேஸ்வரி கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக வீடுகளில் பொதுமக்கள், சுவாமியை வழிபட்டு, புத்தாடை அணிந்து கொண்டு, குடும்பத்துடன் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.