/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிளை வாய்க்காலில் கழிவு நீர் துார்வார மக்கள் வலியுறுத்தல்
/
கிளை வாய்க்காலில் கழிவு நீர் துார்வார மக்கள் வலியுறுத்தல்
கிளை வாய்க்காலில் கழிவு நீர் துார்வார மக்கள் வலியுறுத்தல்
கிளை வாய்க்காலில் கழிவு நீர் துார்வார மக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 24, 2024 02:04 AM
அரவக்குறிச்சி, டிச. 24-
கூடலுார் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள, பாலத்தின் நடுவே இருபுறமும் கழிவு நீர் செல்வதால் கிளை வாய்க்காலை துார்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னதாராபுரம், அமராவதி கிளை வாய்க்கால் ஒத்தமந்துறையில் இருந்து, ராஜபுரம் வரை அமைந்துள்ளது. பாசனத்திற்காக அமராவதி கிளை வாய்க்காலில், தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கூடலுார் கீழ்பாகம் பகுதியில் உள்ள, பாலத்தின் நடுவே இருபுறமும் கழிவு நீர் செல்வதால், வாய்க்காலில் சாக்கடை நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, நீரை பயன்படுத்த ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.