/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான சாலை பாப்பகாப்பட்டி மக்கள் அவதி
/
குண்டும், குழியுமான சாலை பாப்பகாப்பட்டி மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலை பாப்பகாப்பட்டி மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலை பாப்பகாப்பட்டி மக்கள் அவதி
ADDED : ஜூலை 18, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி பஞ்., பாப்பகாப்பட்டி நெடுஞ்சாலை பிரிவு சாலை பகுதியிலிருந்து கோடங்கிப்பட்டி, இரும்பூதிப்பட்டி இணைப்பு கிராம சாலை தார்ச்சாலையாக உள்ளது.
இந்த சாலையில், பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், இரவில் வாகனங்களில் செல்லும்போது தடுமாறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளது.
எனவே, பாப்பகாப்பட்டி பிரிவு சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.