உயர்மட்ட பாலத்தில் சிலாப் கற்கள் சேதத்தால் மக்கள் பீதி
உயர்மட்ட பாலத்தில் சிலாப் கற்கள் சேதத்தால் மக்கள் பீதி
ADDED : அக் 04, 2026 05:39 AM

கரூர்:கரூர் அருகே, உயர்மட்ட பாலத்தில், சிலாப் கற்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கரூர்
- மதுரை தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூர் அருகே, அமராவதி ஆற்றின்
குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த
பாலங்களின் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று
வருகின்றன.
இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
இருந்து, கரூர் செல்லும் உயர்மட்ட பாலத்தின் ஓரத்தில், நடைபாதையில் உள்ள
சிலாப் கற்கள் பல மாதங்களாக சேதம் அடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள்
நடைபாதையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும், பாலத்தின்
தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளது. ஆனால், உடைந்த பாலத்தின் தடுப்பு
சுவர்களை, புதிதாக கட்டாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம்
கடத்தி வருகின்றர். இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே
கரூர் அருகே, அமராவதி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட
பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
