தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுத்தம் செய்யப்படாத மேல்நிலைதொட்டியால் மக்கள் பெரும் பீதி

சுத்தம் செய்யப்படாத மேல்நிலைதொட்டியால் மக்கள் பெரும் பீதி

சுத்தம் செய்யப்படாத மேல்நிலைதொட்டியால் மக்கள் பெரும் பீதி


ADDED : மே 30, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் அருகே, பயன்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாநகராட்சி சணப்பிரட்டி அருகே, பாதையூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம் பாதையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடையும் நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய, அமைக்கப்பட்டுள்ள ஏணியும் துருப்பிடித்துள்ளது. மேலும் தொட்டியை சுத்தம் செய்து, பல மாதங்கள் ஆகிறது எனவும், பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்தால், இரண்டு நாட்களில் புழுக்கள் உற்பத்தியாவதாக, அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே, சணப்பிரட்டி அருகே பாதையூரில் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்ய, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us