/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் கடை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு
/
ரேஷன் கடை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு
ADDED : ஜூலை 15, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், பூவாயிபட்டியில், ரேஷன் கடை தேவை என அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:குளித்தலை தாலுகாவிற்குட்பட்ட, வடசேரி பஞ்சாயத்தில் உள்ள பூவாயிபட்டி, நாவலக்காபட்டி ஆகிய கிராமத்தில், 120க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தோம்.
தற்போது, 4 கி.மீ., தொலைவில் ரேஷன் கடை மாற்றப்பட்டுள்ளது. அங்கு செல்ல பஸ் வசதியில்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.