ADDED : அக் 15, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 15-
கரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பாலஸ்தீனம், லெபனான் மீதான போரை இஸ்ரேல் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், இஸ்ரேல் பிரதமரை குற்றவாளியாக அறிவித்து, ஐ.நா., மன்றம் கைது செய்ய வேண்டும். இஸ்ரேல் உடனான துாதரக உறவை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கிய மன்ற மாநில பொதுச்செயலாளர் கோவன், மா.கம்யூ., கட்சி நகர செயலாளர் தண்டபாணி, வி.சி.க., நிர்வாகி புகழேந்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகி ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.