/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடையகோட்டைக்கு மினி பஸ் இயக்க மக்கள் வேண்டுகோள்
/
இடையகோட்டைக்கு மினி பஸ் இயக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 05, 2026 07:34 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து, இடையகோட்டைக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் இருந்து இடையகோட்டை வரை மொண்டியூத்தாங்கரை, தண்ணீர்பந்தல், குமாரபாளையம், வெங்கடாபுரம், பாறையூர் வழியாக மினி பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. மேலும் இப்பகுதி கிராமங்கள், போக்குவரத்து வசதியின்றி உள்ளது. இப்பகுதியில் இருந்து கட்டட தொழிலாளர்கள், பெயின்டர்கள், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையகோட்டை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள் என பலரும், 3 கி.மீ., நடந்து மெயின் ரோடு பகுதிக்கு வந்து பஸ் ஏற வேண்டிய சிரமமான சூழ்நிலை உள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலும் சிரமப்படுகின்றனர்.
எனவே அரவக்குறிச்சியில் இருந்து இடையகோட்டை வரை, மக்கள் நலன் கருதி மினி பஸ்களை இயக்க வேண்டும்.

