/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
/
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
ADDED : ஜன 30, 2026 04:56 AM
அரவக்குறிச்சி: கழிவுநீர் கால்வாய் இல்லாததால், தேங்கி நிற்கும் கழிவுநீர் சாலையில் ஓடி தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த சாலையில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, மின்வாரிய அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையில், கழி-வுநீர் கால்வாய் இல்லாததால் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே, பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்கி விடுகிறது. தேங்-கிய கழிவு நீர் நிரம்பி, சாலையில் செல்லும் அவல நிலை ஏற்படு-கிறது. சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவ-திப்படுகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, விரைவில் கழி-வுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

