/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காந்தி சிலை அருகில் வேகத்தடை அமைக்க மக்கள் வேண்டுகோள்
/
காந்தி சிலை அருகில் வேகத்தடை அமைக்க மக்கள் வேண்டுகோள்
காந்தி சிலை அருகில் வேகத்தடை அமைக்க மக்கள் வேண்டுகோள்
காந்தி சிலை அருகில் வேகத்தடை அமைக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : அக் 29, 2024 07:12 AM
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை அருகில், திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும், காந்தி சிலையை சுற்றி தென் பகுதி வழியாக நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்கிறது.
அதேபோல், கரூர், மாயனுார், முசிறி, திண்டுக்கல், மணப்பாறை பகுதிகளில் இருந்து வரும் பஸ்களும் காந்திசிலை மேற்கு பகுதி வழியாக பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்கிறது.இரண்டு மார்க்கத்தின் வழியாக வரும் அனைத்து பஸ்கள் மற்றும் கடைவீதி, ரயில் நிலையம், மருத்துவமனை செல்லும் வாகனங்கள் வருவதால், காந்திசிலை முன் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள்
நலன் கருதி, காந்திசிலை அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.