/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலை, தரகம்பட்டியில் 'அம்மா' உணவகம் அமைக்க மக்கள் வேண்டுகோள்
/
தோகைமலை, தரகம்பட்டியில் 'அம்மா' உணவகம் அமைக்க மக்கள் வேண்டுகோள்
தோகைமலை, தரகம்பட்டியில் 'அம்மா' உணவகம் அமைக்க மக்கள் வேண்டுகோள்
தோகைமலை, தரகம்பட்டியில் 'அம்மா' உணவகம் அமைக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : மார் 03, 2025 07:30 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை யூனியனில், 20 பஞ்சாயத்துகள் உள்ளன. மேலும், யூனியன் அலுவலகம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி, வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அரசு, தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
தோகைமலை யூனியன் பகுதியில் உள்ள கிராமப்புற பொதுமக்கள், தினந்தோறும் மருத்துவமனை, யூனியன் அலுவலகம் என, பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். தினந்தோறும் கிராம பகுதியில் இருந்து உழைக்கும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் வந்து செல்லும் இடங்களில், 'அம்மா' உணவகம் அமைத்தால் கிராமப்புற ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு கட்டடத்தில், 'அம்மா' உணவகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், கடவூர் யூனியன், தரகம்பட்டியில் யூனியன் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இப்பகுதி அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். அவர்களின் நலன் கருதி யூனியன் அலுவலகம், பழைய கட்டடத்தில், 'அம்மா' உணவகம் அமைத்தால், குறைந்த செலவில் நிறைவான உணவு சாப்பிட ஏதுவாக இருக்கும். எனவே, தமிழக முதல்வர், தோகைமலை, கடவூர் யூனியனில், 'அம்மா' உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.