/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் 7 வது வார்டில் மோசமான சாலையால் மக்கள் அவதி
/
அரவக்குறிச்சியில் 7 வது வார்டில் மோசமான சாலையால் மக்கள் அவதி
அரவக்குறிச்சியில் 7 வது வார்டில் மோசமான சாலையால் மக்கள் அவதி
அரவக்குறிச்சியில் 7 வது வார்டில் மோசமான சாலையால் மக்கள் அவதி
ADDED : அக் 20, 2024 01:24 AM
அரவக்குறிச்சியில் 7 வது வார்டில்
மோசமான சாலையால் மக்கள் அவதி
அரவக்குறிச்சி, அக். 20-
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட, 7வது வார்டில் கனரக வாகனங்கள் செல்வதற்காக காவல் நிலையம் முதல், காசி விஸ்வநாதர் ஆலயம் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், அங்கன்வாடி மையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
சாலை போடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படும் இச்சாலையை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என, இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டனின் சொந்த வார்டான, இந்த சாலையை இதுவரை கண்டு கொள்ளவில்லை.
மழை காலத்தில், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர். கடந்த வாரம் பெய்த கன மழையால், சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மண்ணை நிரப்பி சென்றதால், மழை பெய்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இச்சாலை வழியாக நடந்து சென்ற முதியவர் ஒருவர் மண் வழுக்கி கீழே விழுந்துள்ளார். மேலும் வாகனங்களில் செல்லும் போதும், பலர் வழுக்கி விழுகின்றனர்.
இச்சாலையில், காவிரி குழாயும் அடிக்கடி பழுது ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருவதால் விரைந்து செயல்பட்டு இச்சாலையை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.