/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே மோசமான சாலையால் மக்கள் அவதி
/
கரூர் அருகே மோசமான சாலையால் மக்கள் அவதி
ADDED : ஆக 29, 2025 01:48 AM
கரூர், கரூர் அருகே உள்ள சாலை பல ஆண்டுகளாக, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வடக்கு காந்தி கிராமம் ராம் சர்மா நகர் சாலை வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு கார்கள், வேன்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், அதிகளவில் வீடுகள் உள்ளது. இந்நிலையில், வடக்கு காந்தி கிராமம் ராம் சர்மா நகரில் உள்ள சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ராம் சர்மா நகர் சாலையை, சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.