/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் மக்கள் அவதி
/
கரூரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் மக்கள் அவதி
கரூரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் மக்கள் அவதி
கரூரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் மக்கள் அவதி
ADDED : பிப் 20, 2024 10:50 AM
கரூர்: நாள்தோறும் வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில், கரூர் மாநகராட்சி பகுதிகளில் தற்போது பெரிய அளவிலான கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது.
விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதியை சுற்றி அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது. வாய்க்கால்களில் தற்போது சாக்கடை நீரே செல்கிறது. இதனால், பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெயிலின் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டு மொட்டை மாடி, திறந்த வெளிப்பகுதிகளில் துாங்குகின்றனர். ஆனால், கொசுக்கடியால் சிறது நேரம் கூட துாங்க முடியாமல் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். குறிப்பாக பழைய சணப்
பிரட்டி பஞ்சாயத்து, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கொசுக்கடியால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, எந்த பகுதிகளிலும் குப்பைகளை தேங்க விடாமல் அப்புறப்படுத்த வேண்டும். மேலும், தரமான கொசு ஒழிப்பு மருந்துகளை கொள்முதல் செய்து, முறையாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

