ADDED : டிச 06, 2024 07:27 AM
கரூர்: கரூர், தெற்கு காந்திகிராமம் பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் வடக்கு மற்றும் தெற்கு காந்திகிராமம் என இரண்டு பகுதிகள் உள்ளன. தெற்கு காந்திகிராமம் பகுதியை சுற்றிலும், குடியிருப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், குடியிருப்புகளின் நிலைக்கு ஏற்ப, இந்த பகுதியில் போதிய அளவில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, தெற்கு காந்திகிராமம் பகுதியில் மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி, சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.