/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோகனுார் பாலத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அவதி
/
மோகனுார் பாலத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அவதி
மோகனுார் பாலத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அவதி
மோகனுார் பாலத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அவதி
ADDED : மே 30, 2025 01:17 AM
கரூர், வாங்கல் - -மோகனுார் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில், பெரும்பாலான விளக்குகள் எரியாத நிலையில் உள்ளன.
கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த, 2016ல், 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. 2018ம் ஆண்டு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான மின் கம்பங்களில், விளக்குகள் சரியாக எரிவது இல்லை.
கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் வாங்கல் பாலத்தில் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் விளக்குகள் சரிவர எரியாததால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, வாங்கல்--மோகனுார் உயர்மட்ட பாலத்தில் உள்ள மின் கம்பங்களில், அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.